பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடலும், நடிகையுமான மீரா மிதுன், சக போட்டியாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் விதண்டாவாதம் செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று கூறி பிக்பாஸ் வீட்டில் புயலைக் கிளப்பினார். இந்த விஷயத்தில் சக போட்டியாளர்கள், வெளியில் உள்ள பார்வையாளர்களும் மீரா மதுனை வெறுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.
அதன்பிறகு தமிழகத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்குப் பதிவு செய்கிறார்கள். இங்கு சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் நான் அரசியலுக்கு வர உள்ளேன். அதிமுக கட்சி, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பெண்கள் அமைச்சராக பதவிக்கு வரவேண்டும் என்று கொளுத்திப் போட்டார்.
இப்படி சர்ச்சை ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ஊழல் எதிர்ப்பு ஆணையம்' என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின் தமிழக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.