மருத்துவ தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள்
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று நீட் தேர்வு அடிப்படையில் தொடங்கியது. முதல் நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கலந்தாய்வு நடந்தது.மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடந்தது. முதல் கட்ட மருத்துவ பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சுகாதார செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கினார். 10 மாணவ- மாணவிகளும் சென்னை அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்.
-அசோக்குமார்