மருத்துவக் கனவை சிதைக்காதே:
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து SFI போராட்டம்
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். தமிழக சட்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கக் கூடாது. மாநில சுயாட்சி உரிமைகளை பறித்து கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லும் ஏதேச்சதிகாரத்தை கைவிட வேண்டும்.
தமிழக சட்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் குடியரசத் தலைவர் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயமாகும். மத்திய அரசின் இந்த அலட்சிய போக்கிற்கு எதிராகவும், மாநில அரசின் கையாலாகதாத் தனத்திற்கு எதிராகவும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
படம் : அசோக்குமார்