என்னை நீக்குவதற்கு தினகரனுக்கு தகுதி இல்லை:
குமரகுரு எம்.எல்.ஏ.
விழுப்புரம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, ’’விழுப்புரம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு டிடிவி.தினகரனுக்கு தகுதி இல்லை’’என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’10 ஆண்டுகாலமாக டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்தவர் ஜெயலலிதா. தற்போது கொள்ளைப்புறமாக கட்சிக்குள் நுலைந்தவர் டிடிவி.தினரகன். இவரை கட்சி தலைமை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். சசிகலாவே தற்காலிகமாக அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆவேசமாக பேட்டியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா ஒழிக, டிடிவி.தினகரன் ஒழிக என்றும் நிரந்தர மாவட்ட செயலாளர் அண்ணன் குமரகுரு வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
- எஸ்.பி.சேகர்