மதுசூதனன் இல்லத்தில் ஓ.பி.எஸ். ஆலோசனை(படங்கள்)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுசூதனன் இல்லத்திற்கு திடீர் வருகை புரிந்தார். மதுசூதனின் மனைவி ஜீவாவின் உடல் நலம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
அதை தொடர்ந்து மதுசூதனுடன் ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.
படங்கள்: அசோக்