Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி தடையை மீறி பேரணி! முற்றுகை!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசும், தேசிய பசுமை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் அனுமதி அளித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

p

 

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரியும், டெல்டா பகுதியை பாதுககாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில்  கடலூரில் தடையை மீறி கண்டன பேரணியும், ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமும்  நடத்த அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், விவசாய சங்கங்கள்  சார்பில் அறிவிக்கப்பட்டது.  


அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே போராட்டக்குழுவினர் ஏராளமானோர் திரள தொடங்கினர்.  அப்போது அங்கு வந்த காவல்துறையினர், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  மீறினால் கைது செய்வோம் எனவும் எச்சரித்தனர். ஆனாலும் காவல்துறையின் தடையை மீறி பேரணி புறப்பட்டது.  நேதாஜி சாலை, ஆல்பேட்டை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்ததால், ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமாக  மாறி தலைவர்களும், நிர்வாகிகளும் கண்டன உரையாற்றினர்.

 

இந்த போராட்டத்தில் தி.மு.க மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரசேகரன்,  காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் அமைப்பாளர் சண்முகம், ஹைட்ரோ கார்பன் சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஏ.ஐ.டி.யு.சி, த.வா.க,   விவசாய தொழிலாளர் சங்கம், மக்கள் அதிகாரம், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம், அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு,  மீனவர் வாழ்வுரிமை இயக்கம், மீனவர் விடுதலை வேங்கைகள், ஓய்வூதியர் சங்கம் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி  உரையாற்றினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரனிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.

 

சார்ந்த செய்திகள்