நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்:
வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்தாலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 33 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் தென்மேற்கு பருமழை ஓரளவுக்குதான் பெய்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவின் தெற்கு பகுதி முதல் தமிழகத்தின் வடக்கு பகுதி வரைமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தெற்கு ஆந்திரா முதல் தமிழகத்தின் வடபகுதி வரை வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் வடமாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். நாளை முதல் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும். இந்த மழை 3 நாட்கள் நீடிக்கும். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.