Skip to main content

மலேசியாவில் உயிருக்கு போராடும் இளைஞரை மீட்க போராடும் உறவுகள்...

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

 

Malaysia  issue

 

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, தொழுதூர் அடுத்துள்ளது சித்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விஜயகுமார், சுப்பிரமணி எனும் சகோதரர்கள் இருவர் பிழைப்பு தேடி கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மலேசியா நாட்டிற்கு சென்றனர். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி மலேசியா சென்ற அவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

மலேசியாவில் உள்ள பிரபல SHOPEE EXPRESS ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வேலை. அவர்கள் அருகே இருந்த f3/13 jalan subang mas opposite, Geno hotel -40300. Malaysia எனும் முகவரியில் தங்கியிருந்தார்கள். இரு வருடங்கள் கடந்துள்ளது.

 

குழந்தை பிறந்தது சில மாதங்களில் தனது கணவர் விஜயகுமாரை வெளிநாட்டிற்கு அனுப்பி அவரது உறவினர்கள் அனுப்பிவைக்க நம்பிக்கையோடு கைக்குழந்தையோடு காத்திருந்தார் ராஜலட்சுமி.

 

வயதான அப்பா, அம்மாவுக்கு நடந்த எதையும் சொல்ல வேண்டாம் என உடன் இருந்த அண்ணனுடன் சேர்ந்து அங்கேயே வேலை செய்து வந்தார் விஜயகுமார். இந்நிலையில் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றது.

 

அதிலிருந்து இன்று வரை  மீண்டு வருவதற்கு மிக நீண்ட மருத்துவ போராட்டம் தொடர்கிறது. மருத்துவர்களின் கடின முயற்சியால்  உடல் நலிவுற்ற விஜயகுமாரின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

இந்நிலையில், மலேசியாவில் உயிருக்கு போராடும் இளைஞரான விஜயகுமாரை எப்படியாவது உயிரோடு தமிழகம் கொண்டு வந்துவிட வேண்டும் என அவரது குடும்பம் மற்றும் மனைவி ஆகியோர் 2வயது கைக்குழந்தையுடன் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்