Published on 10/12/2018 | Edited on 10/12/2018

சாதிப்பற்று இருப்பது தப்பில்லை என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் அகில இந்திய நாடார் பேரவை சார்பில் நடைப்பெற்ற நாடார் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,
ஒவ்வொரு மனிதருக்கும் மரபணு என்று இருக்கிறது. அதேபோல் சமுதாய மரபணு இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக என்று சொல்லுவோமே. அப்படி பரம்பரை பரம்பரையாக இருப்பதுதான் அது. ரத்தத்திலேயே ஊறிப்போய்விட்டது என்பது போலத்தான் இந்த ஜாதிப் பற்று விஷயத்தையும் பார்க்கவேண்டும்.
ஜாதிப் பற்று இருக்கலாம். இதில் தவறேதுமில்லை. ஜாதி வெறிதான் இருக்கக்கூடாது. அடுத்த ஜாதியை நசுக்கவேண்டும் என்றுதான் நினைக்கக் கூடாது. இவைதான் தவறு. நம் சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும், நம் சமுதாய மக்கள் நன்றாக வளரவேண்டும் என்று நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. இவ்வாறு பேசினார்.