கோயில் திருவிழாவிற்காகக் கூழ் காய்ச்சும் போது, அதில் ஒரு நபர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில், கடந்த ஜூலை 29- ஆம் தேதி ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆறுக்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் கூல் காய்ச்சப்பட்டது. அப்போது, கூழ் காய்ச்சும் பணியில் இருந்த முத்துக்குமாருக்கு வலிப்பு ஏற்படவே, நிலை தடுமாறி கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்க முடிந்தும், முடியாத நிலையில், பாத்திரம் கீழே கவிழ்ந்ததில், கூழ் முழுவதும் அவர் மீது கொட்டியதில் துடி துடிக்கும் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
65% தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துக்குமார், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.