கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை ரூபாய் 8 லட்சம் முன்பணம் வசூலித்த வழக்கில் சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நேரு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில், 'அறிகுறி இருப்பதாகக் கூறி மதுரை தனியார் மருத்துவமனை, கரோனா சிகிச்சைக்கு முன்பணமாக ரூபாய் 8 லட்சம் பெற்றது. பரிசோதனைக்குப் பிறகு நெகட்டிவ் என முடிவு வந்ததால் இரண்டு நாட்களில் நேருவும், அவரது மனைவியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இரண்டு நாள் சிகிச்சைக்கானச் செலவு போக மீதிப்பணத்தை திருப்பிக் கேட்டபோது மருத்துவமனை தர மறுத்ததாகவும், ரூபாய் 1.05 லட்சத்தைத் திருப்பி தந்த நிலையில், ரூபாய் 65,840-க்கு மட்டுமே மருத்துவமனை ரசீது தந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (02/09/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், மருத்துவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.