ரயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்பட்ட உணவில் தலைமுடி!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பெங்களூரு - சதாப்தி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் பயணித்த பெட்டி எண் C8. அந்தப் பெட்டியில் பயணிகளுக்கு ரயில்வே கேண்டினில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தில் இருந்த வடையில் முடி இருப்பதைக் கண்டு அதிருப்தியடைந்துள்ளார்.
மேலும், அதை தன் செல்போனில் படமெடுத்த நீதிபதி, ரயில்வே கேண்டினில் கொடுக்கப்படும் கருத்துப்படிவத்தில் உணவுக்கான பகுதியில், மிக மோசம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவு தயாரிப்பு, பொட்டலமிடுதலில் ஈடுபடும் பணியாளர்கள் தலை மற்றும் கைகளில் உறைகளை அணிவதை IRCTC நிர்வாகம் உறுதி செய்யவேண்டுமெனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த வாரம் மத்திய தணிக்கைக் குழுவான சி.ஏ.ஜி ரயில்வே உணவுகள் மனிதர்கள் உண்ணத் தகுதியற்றவை எனக்கூறியதும், அதைத் தொடர்ந்து டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- சி.ஜீவா பாரதி