Published on 06/07/2021 | Edited on 06/07/2021

ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான மதனை கடந்த மாதம் 18ஆம் தேதி தருமபுரியில் போலீசார் கைது செய்தனர். ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் பலமுறை மனுத்தாக்கல் செய்தும், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் ஓராண்டிற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.