கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் உதவியாளராக இருந்து வருபவர் தேனியை சேர்ந்த மதன்.
இந்த நிலையில்தான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதன் காரில் செல்லும்போது பெரும் விபத்தில் சிக்கினார். அதைக்கண்டு அப்பகுதியில் இருந்த மக்கள் விபத்தில் சிக்கி இருந்த மதனை தேனி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கூட திடீரென சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவரவே மனம் நோந்து போய்விட்டார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஓபிஎஸ் ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் செய்து வருவதால், நாளை காலை தேனி வந்து மதனுக்கு இறுதி மரியாதை செலுத்த இருக்கிறார்.
இந்த மதன் பெரியகுளத்திற்கும், போடிக்கும் ஓபிஎஸ் வரும்போதெல்லாம் உடன் வந்து போவார். அது போல் சென்னைக்கும் ஓபிஎஸ்சுடன் போய்விடுவார். அதுபோல் கட்சிக்காரர் முதல் பொதுமக்கள் வரை அனைவரிடமும் அன்பாக பேசி அவர்களுடைய குறைகளையும் கோரிக்கைளையும் ஓபிஎஸ் மூலம் தீர்த்து வைத்து துணைமுதல்வர் ஓபிஎஸ்-க்கு ஒரு பக்கபலமாக இருந்து வந்தார்.
அப்படிப்பட்ட உதவியாளர் மதன் சிகிச்சை பலனின்றி இறந்தது கண்டு மாவட்டத்திலுள்ள கட்சிக்காரர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.