சமையல் கியாஸ் மானியம் ரத்து, ஜி.எஸ்.டி. விலையை கண்டித்து மகளிர் காங்கிரஸ் போராட்டம்
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் சமையல் கியாஸ் மானியம் ரத்து, ஜி.எஸ்.டி. விலையை கண்டித்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடந்தது. மகளிரணி தலைவி ஜான்சி ராணி தலைமை தாங்கினார். போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.
சிலிண்டர் மானியம் ரத்து, பெண்கள் வயிற்றில் அடிப்பது என்பதை குறிக்கும் வகையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி ஊர்வலம் நடத்தினர். அப்போது மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
படங்கள்: அசோக்குமார்