Skip to main content

சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..." பாட்டுக்கு இசையமைத்த கோவர்த்தனன் காலமானார்..!

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..." பாட்டுக்கு இசையமைத்த கோவர்த்தனன் காலமானார்..!



சேலம் குகை பகுதியில் உள்ள பஞ்சந்தாங்கி ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவில் வசிப்பவர் டி.கோவர்த்தன் (வயது - 90). பிரபல திரைப்பட இசை அமைப்பாளராக இருந்த இவர், அஞ்சல் பெட்டி 520, இராமு, பூவும் பொட்டும், பட்டணத்தில் பூதம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இளையராஜா ஆரம்ப காலங்களில் இவரிடம் உதவியாளரக இருந்துள்ளார். 1985-க்குப் பின்னர் நவீன இசை வடிவம் தமிழ் திரை உலகில் துவங்கியதும், இளையராஜா, தேவா உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களிடம் கோவர்த்தன் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர் சென்னையை விட்டு சேலத்தித்துக்கு குடி பெயர்ந்து விட்டார். பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் சிவகாமி மகனிடத்தில் சேதி செல்லடி என்ற பாடல் காமராஜர் அவர்களை சந்திக்க கண்ணதாசன் தூது விடும் பாடல் தமிழக அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்புடன் விளங்கிய பாடலாகும்.

கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவுடன் இருந்த கோவர்த்தன் இன்று காலை 9.30 - மணிக்கு அவரது வீட்டில் காலமானார். அவரது உடல் ஏரியூட்டல் நாளை மாலை, இரண்டு மணிக்கு மனக்காடு காக்கையன் சுடுகாட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படும். காலம் சென்ற கோவர்தனத்துக்கு இரு பெண்கள் மற்றும் இந்திரா பாய் (வயது - 80) என்ற மனைவியும் உள்ளனர்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்