30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை தமிழகம் முழவதும் உள்ள ரேசன் கடை ஊழியர்கள் 30 ஆயிரம் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்களை பொட்டலமாக வழங்கவேண்டும்.
அமுதம் அங்காடி பணியாளர்களுக்கு வழங்குகிற ஊதியத்தையே கூட்டுறவு அங்காடி பணியாளர்களுக்கும் வழங்கவேண்டும், பொது விநியோகதிட்டத்திற்குகென தனித்துறை அமைக்கபடவேண்டும்,ரேஷன் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், பணி வரன் முறை செய்யபடாத பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி பணிவரன் முறை செய்ய வேண்டும் இது வரை மூன்று முறை இத்துறையயை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசு செயாலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திங்கள் ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர் என்று கூறினார்.