தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 11.00 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருச்சி- 34%, ஈரோடு- 25.91%, மதுரை- 26.87%, கன்னியாகுமரி- 24.22%, அரியலூர்- 18.90% , நாமக்கல்- 31%, சேலம்- 21%, புதுக்கோட்டை- 26.69%, திருவாரூர்- 31.81%, தருமபுரி- 17.13%, கிருஷ்ணகிரி- 22.32%, சிவகங்கை- 24.7%, கரூர்- 31.4%, திண்டுக்கல்- 25.67%, தூத்துக்குடி- 25.01%, தேனி- 32%, திருவள்ளூர்- 23%, பெரம்பலூர்- 25.67%, கடலூர்- 22.29%, நீலகிரி- 23.29%, திருப்பூர்- 23.87%, திருவண்ணாமலை- 16.67%, ராமநாதபுரம்- 26.25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.