வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் தமிழக மற்றும் ஆந்திர ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வருகின்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இரவு சுமார் 7:30 அளவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு அதீத போதையில் வந்த குடிமகன் ஒருவர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை திடீரென வழிமறித்த அந்த போதை ஆசாமி உடனடியாக பேருந்தில் ஏற முயற்சித்தார். ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் நடத்தினர் அவரை பேருந்தில் ஏற விடாமல் கீழே இறக்க முயற்சித்தார். அப்போது பேருந்து ஓட்டுனரை போதை ஆசாமி அடிக்க கை ஓங்கித் தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை அறிந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போதை ஆசாமியை பேருந்தில் இருந்து இறக்கி அப்புறப்படுத்தி விட்டனர்.
அப்படி இருந்தும் அடங்காத போதையா சாமி சாலையின் நடுவே தட்டுத் தடுமாறி தள்ளாடி நடந்து போக்குவரத்துக்கு மேலும் இடையூறு ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.