Skip to main content

மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிகள் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி பகிர்வு!

Published on 13/08/2018 | Edited on 27/08/2018



மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிகள் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி பகிர்வு!

கடலூர் மத்திய சிறைச்சாலயில் 700- க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். இவர்களில் 27 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை காரணமாக அவர்கள் குடும்பத்துடன் விருந்து சாப்பிட இன்று அனுமதிக்கப்பட்டனர்.

அதையடுத்து இந்த 27 பேரையும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 112 பேர் இன்று சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும், உணவையும் பரிமாறிக் கொண்டனர். சிறையில் சமைத்த உணவினை குடும்பத்தினருக்கு ஊட்டி விடுவது, குழந்தைகளுடன் கொஞ்சி பேசியது மற்றும் வயதான தாயின் மடியில் உறங்குவது போன்ற நெகிழ்ச்சியான காட்சிகளை படங்களாக எடுத்து கடலூர் மத்திய சிறை வளாகம் வெளியிட்டது.

பல்வேறு சூழ்நிலைகளால் இதுபோன்று குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்று வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் இவர்களுக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு வரப்பிரசாதமாகும். கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் நெகிழ்ச்சியான இந்நிகழ்வினால் மகிழ்ச்சியடைந்தனர்.

சார்ந்த செய்திகள்