Skip to main content

ரவுடி கொலை வழக்கில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சரண்!      

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

 lawyer who surrendered in court in the rowdy   case

 

சேலத்தில், ரவுடி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

 

சேலம் அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ஒரு ரவுடி. இவர் கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டார். இது குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ், வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. அவர்களை  காவல்துறையினர் தேடி வந்தனர்.     

 

இதற்கிடையே இவர்கள் இருவரும், நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேசை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் தியாகராஜனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், செப்.8 ஆம் தேதி சேலம் 5ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்