சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் கால்கடுக்க நிற்கும் நோயாளிகள்
கடந்த சில தினங்களாக சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் பகல் இரவு நேரங்களில் சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. வெப்பநிலையுடன் இருந்த இடங்களில் மழைபெய்வு ஏற்பட்டதால் அதிக வெப்பநிலை ஏற்பட்டு பல கிராமங்களில் மக்களுக்கு சளி, இருமல்,காய்சல் உள்ளிட்ட நோய்களால் அவதி அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஏழை நோயளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ரூ100 முதல் 500 வரை செலவு ஆகிறது என்று அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவது இல்லை. சிகிச்சையும் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கிறார்கள். நோயாளிகள் அனுமதி சீட்டு வாங்குவதில் இருந்து மருத்துவரை பார்க்கிற வரைக்கும் போராட்டகளமாகவே காட்சி அளிக்கிறது மருத்துவமனை. கால் கடுக்க நின்று அனுமதி சீட்டு வாங்கிய பின்னர் மருத்துவரை பார்க்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. சரியான நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் மேலும் மணி கணக்கில் வரிசையில் நிற்கவேண்டி உள்ளது. இதனால் நோய்வாய்பட்டு முடியாத நிலையில் உள்ள நோயாளிகள் கடும் அவதி அடைந்து செல்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து நஞ்சமகத்துவாழ்கை கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற நோயாளி கூறுகையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் காய்சல் அதிமாக உள்ளது. இதற்கு மாத்திரை சாப்பிட்டும் நிக்கல இதனால் சனிக்கிழமை காலை 10மணிக்கு மருத்துவமனைக்கு வந்தேன். சீட்டு வாங்க முக்காமணி நேரம் வரிசையில் நின்னு சீட்டு வாங்கியாந்து டாக்டரை பார்க்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்னுட்டு இருக்கேன் டாக்டரே இன்னும் வரல. தனியார் மருத்துவ மனைக்க போன கொரைஞ்சது ரூ 300 செலவு ஆவுதேன்னு இங்க வந்த நோயாளிகளை இதுபோல டாக்டர் இல்லாம நிற்க வைச்சு மனஉலைச்சல் ஏற்படுத்தி இனி அரசு மருத்துவமனைக்கே வரகூடாது. என்ற என்னத்தை உருவாக்குறாங்க இதுக்கு இவங்க மேல் அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா என கேட்டுகொண்டு நான் ஒரு நாளைக்கு விவசாய கூலி வேலைக்கு போனாலே ரூ200தான் கெடைக்குது இதவெச்சுட்டு வைத்தியம் பாக்கறதா? வைத்த கழுவுறதா என்ற கேள்வியை நம்மிடமே கேட்டார்.
-காளிதாஸ்