Skip to main content

மிகக் கீழான ஜாதி எது? என்று சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் கேள்வி: பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை புகுத்தும் செயல்! கி.வீரமணி கண்டனம்

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

 

k.veeramani



சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் ஆறாம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்வி - பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப்  பாடத் திட்டங்கள்மூலம் புகுத்த முயற்சிப்பதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

அவரது அறிக்கை வருமாறு:
 

சி.பி.எஸ்.இ. 6 ஆம் வகுப்புத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று.

இந்து மத வர்ணாசிரமத்தின்படி மிகக் கீழான ஜாதி எது? என்று சி.பி.எஸ்.இ. பாடத் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது!

மூளையில் ஆணி அடித்துப்  பதிய வைக்கும் முயற்சி

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை பாடத் திட்டங்கள்மூலம் புகுத்த முயன்றதோடு, அதை மேலும் அவர்களின் மூளையில் ஆணி அடித்துப் பதிய வைக்கும் முயற்சியாகவே மேற்கண்ட அக்கேள்வி தேர்வில் கேட்கப்பட்டுள்ளது!
 

இதன்மூலமாவது புரிய வேண்டாமா?
 

மத்திய கல்வித் திட்டம் என்பதின் சாயம் வெளுத்துவிட்டது! அது ஏதோ பெரிய அறிவை - மாநிலக் கல்வித் திட்டத்தைவிட வளர்த்திடும் - தகுதி திறமை பெருக்கிடும் கல்வி முறை என்று உளறுகிறார்களே, அவர்களுக்குப் புரட்டு என்பது இதன்மூலமாவது புரிய வேண்டாமா?
 

பின்குறிப்பு: அத்தீமையால் ஒரே ஒரு நன்மை என்ன தெரியுமா?

இந்து மதம் வர்ணாசிரமத்தின்படி என்பதன்மூலம் வர்ணாசிரம தர்மத்தைப் பாதுகாப்பது  இந்து மதம் என்ற பார்ப்பன சனாதன மதம் என்பதை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டதற்கு (நமது நன்றியுடன் கூடிய) கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்