கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் வினோத்குமார் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சக பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ஒருவர், கடந்த மார்ச் 24- ஆம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எழுத்து மூலம் புகார் அளித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தபோது, வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர்கள் சிலர் திடீரென்று பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் வினோத்குமார் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஜூன் 26- ஆம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.