Skip to main content

“நகைக்கடன் நிறுத்தப்படவில்லை...” -முதல்வர் பழனிசாமி

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

krishnagiri district cm palanisamy press meet

 

கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகள், தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் குறைவாகக்தான் இருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு ரூபாய் 672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சோலார் மின் வசதி செய்து தரப்படுகிறது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை. கூட்டுறவு வங்கி கிளைகளில் நகைக்கடன் வழங்குவதற்கு என வரம்பு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை பாதிக்கப்படாத வகையில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. அதிக அளவு நகைக்கடன் வழங்கப்பட்டால் வைப்புத்தொகை கேட்பவர்களுக்கு திருப்பி வழங்க முடியாத நிலை ஏற்படும். 

 

அரசின் நிதி நிலைமைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் 10 நாட்களில் கரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவை குறைக்க முடியும்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்