![KP Anbazhagan](http://image.nakkheeran.in/cdn/farfuture/W_Y_sTctckY-1W1iY2Qzpd36eGC92YYeIIpDwvwXgOI/1533347628/sites/default/files/inline-images/KP%20Anbazhagan%20500.jpg)
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழகத்தில் பெரிய திட்டங்களை செயல்படுத்தும் திராணி தி.மு.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் பெரிய திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் தொடர்ந்து மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து சட்டப்போராட்டங்களை நடத்தி காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்சி ஓரிரு மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டி.டி.வி.தினகரன் தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.