Skip to main content

கோவை சோகம்! தாய், மனைவி, பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை!

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
a

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் அந்தோணிதாஸ், தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

l

 

‘இந்த வீடு ஆசீர்வதிக்கப்பட்ட வீடு’ என்று அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் 12 வருடங்கள் முதுகுவலியால் அவஸ்தைப்பட்டு வந்ததாகவும், குடும்பத்தினரை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததாலும், இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தயவு செய்து என்னை மன்னியுங்கள் என்று சிலரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கும் அவர், கடன் விபரங்களைச் சொல்லிவிட்டு,  ஆவியாக வந்து நாங்கள் யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என்றும் எழுதியிருக்கிறார். 

 

அந்தோணிதாஸ் எழுதிய கடிதத்தையும், 5 பேர் உடல்களையும் கைப்பற்றியிருக்கும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கடற்கரையில் கணவனுக்கு கத்திக்குத்து.... காதலனுடன் சேர்ந்து மனைவி நடத்திய நாடகம்..!''

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

ani

 

சென்னை திருவான்மியூர் நியூ கடற்கரையில் இளம்தம்பதியை தாக்கி 12 சவரன் தங்கச் சங்கலி பறிக்கப்பட்டதாக இன்று காலை தினசரிகளில் செய்தி வெளியானது. ஆனால், இது வழிப்பறி அல்ல. கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி நடத்திய நாடகம் என்பது போலீஸாரின் புலன் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 


தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் மளிகை கடை நடத்தும் விஜயசுந்தரத்தின் மகள் அனிதா, விருதுநகரில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்தார். இவருக்கும் பக்கத்து ஊரான குருவார்பட்டியை சேர்ந்த அந்தோனிக்கும் காதல். அனிதாவை விட அந்தோனிக்கு 4 வயது குறைவு. வயதில் மட்டுமல்ல சாதியிலும் தான். அந்தோனி பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டில் எதிர்ப்பு. இருந்தாலும் இருவரது காதலும் தீவிரமடைந்ததால், பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து, கடந்த 12-09-2018 அன்று ஊர் மெச்சும் அளவுக்கு திருமணம் நடத்தி வைத்தார் விஜய சுந்தரம்.


புதுமாப்பிள்ளை கதிரவன் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்ததால், புதுமணத் தம்பதி சென்னை பல்லாவரத்தில் குடிவந்தனர். இருந்தாலும், பழைய காதலனுடன் நட்பில் இருந்த அனிதா, அவனை சென்னை வரவழைத்து கணவனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். அவரது திட்டப்படி, நேற்று (13-10-2018)காலை 9-30 மணிக்கு திருவான்மியூர் கடற்கரைக்கு கணவன் கதிரவனை அழைத்து வந்த அனிதா, ஆள் அரவமற்ற இடத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி உள்ளனர்.

அந்தோனி

an


அப்போது, அங்கு பதுங்கி இருந்த கள்ளக்காதலன் அந்தோனி, கதிரவனை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டான். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கதிரவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அடையாறு மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். "நாங்கள் கடற்கரையில் விளையாடும் போது வழிப்பறிக் கொள்ளையர்கள் எனது கணவனை தாக்கிவிட்டு 12 சவரன் செயினை பறித்து சென்றுவிட்டதாக''  திருவான்மியூர் போலீஸில் புகார் அளித்தார் அனிதா. ஆனால், முன்னுக்குப்பின் முரணான பேச்சு, சிசிடிவி புட்டேஜ் ஆகியவற்றின் மூலம் குட்டு வெளியே வந்துவிட்டது. 


கொலை வெறித் தாக்குதலை அறங்கேற்றிவிட்டு, சத்தமில்லாமல் மதுரை காமராஜர் பல்கலைக் கழக விடுதிக்கு திரும்பிய அந்தோனியை, தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ''அனிதாவை காதலித்த விஷயம் தெரிந்த உடன் அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டனர். இருந்தாலும், அனிதா என்னோட தொடர்பில் இருந்தார். தேனிலவுக்கு அவர் கொடைக்கானல் செல்லும்போதே, அவரது கணவனை மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால், அது தோல்வியில் முடிந்துவிட்டது" என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.