Skip to main content

வெளிநாட்டுப்பறவைகளின் வருகையால் குதூகலம் ஆன கோடியக்கரை மீனவர்கள்

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
w

 

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்து கொண்டிருப்பதைக் கண்டு அங்குள்ள மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.  இந்த சரணாலயத்திற்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சீசன் பறவைகள் வந்து செல்வது வழக்கம். அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வதும் வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. பறவைகளின் வருகை சுற்றுலா பயணிகளுக்கு மனமகிழ்வை உண்டாக்கும் அதே வேலையில் பறவைகளின் வருகை மீனவர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

 

w

 

பறவைகளின் வருகையால் மீனவர்களை ஏன் குஷியாகியுள்ளனர் மீனவர்களிடமே விசாரித்தோம். "பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்காட்டுப்பகுதிக்கு, வெளிநாட்டிலிருந்து கடும் குளிரைபோக்கவும் உணவைத்தேடியும் கோடியக்கரைக்கு வந்து செல்கின்றன. சைபீரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பெரும்பாலான குளிர் அதிகம் உள்ள நாடுகளில் இருந்தும்,  பூநாரை, செங்கால் நாரை, கடல் காகம் என 247 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.

 

கோடியக்கரை பகுதியில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்,  அதே அக்டோபர் முதல் மார்ச் மாத காலங்களில் தான் வெளிநாட்டு பறவைகளும் வந்து தங்கிவிட்டு செல்கின்றன. அதாவது கடல் காகம் கடற்கரைபகுதியில் அதிகம் காணப்பட்டால் மத்திமீன்கள், மட்லி மீன்கள் அதிகளவில் கிடைக்கும். நாரை பறவைகள் அதிகம் காணப்பட்டால் இறால் மீன்கள் அதிகமாக கிடைக்கும்" என்கிறார்கள்.

 

அதே போல் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இருந்து பழந்திண்ணி வவ்வால்கள் தினந்தோறும் 28 கடல் மைல் தூரமுள்ள  இலங்கை அனுராதபுரம் காட்டுப்பகுதிக்கு  பறந்து சென்று பழங்களைத் தின்றுவிட்டு நாள்தோறும் திரும்பி வருகிறது என ஆச்சர்யப்படுத்துகிறார்கள் உள்ளுர் வாசிகள்.

 

சார்ந்த செய்திகள்