Skip to main content

கோடநாடு விசாரணை; சசிகலாவுக்கு நெருக்கமானவரிடம் விசாரணை

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Kodanadu estate  inquiry; Interrogation with Sasikala's close  person

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்து தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளராகவும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் ஆசிரியராகவும் இருந்த மருது அழகுராஜிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

 

முன்னதாக அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பாக எழுந்த பிரச்சனை நேரத்தில், மருது அழகுராஜ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து தானாக விலகினார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான சில விவரங்களைப் பற்றி தெரிவித்தார். அதே சந்திப்பில், கோடநாடு வழக்கு விசாரித்துவரும் தனிப்படை முன்பு ஆஜராக தயார் என்றும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜரானார். 

 

இந்நிலையில் இன்று வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வழக்கறிஞர் செந்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்