நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷாஜி, அனீஸ் என்ற இருவரிடம் சுமார் 5 மணிநேரம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கொடநாடு வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி வளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் செப்.13 ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மனுவில், கேரளாவைச் சேர்ந்த எனக்கு நீலகிரி, கோவையில் ஜாமீன் தர நபர்கள் யாரும் இல்லை எனக் கூறியுள்ளார் வளையார் மனோஜ்.