Skip to main content

திருச்சி புதிய பேருந்து நிலையம் பிரச்சனையில் அரசியல் சூட்டை கிளப்பிய கே.என்.நேரு..!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
kn nehru


கடந்த தி.மு.க. ஆட்சியில் திருச்சி மக்களின் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்த புதிய பேருந்து நிலையம் என்கிற திட்டத்தை ஆட்சி முடிகின்ற கடைசி நேரத்தில் அப்போது அமைச்சராக இருந்த கே.என்.நேரு தலைமையில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பஞ்சப்பூர் பகுதியில் அடிக்கல் நாட்டினார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஜெ. தலைமையின ஆட்சி தி.மு.க. கொண்டு வந்த இடத்தை தவிர்த்து விட்டு புதிய இடத்தை தேர்வு செய்கிறோம் என்று சொல்லி அப்படியே கிடப்பில் போட்டது.

ஆனாலும் திருச்சி மக்களின் மிக முக்கியமான பிரச்சனையாக இது விஸ்வரூபம் எடுக்கப்பட்ட நிலையில் ஆட்சி முடிகிற கடைசி நேரத்தில் திருச்சி எம்.பி.யாக இருக்கும் குமார் தனக்கு வேண்டப்பட்ட தன் உறவினர்கள் இருக்கும் பகுதியில் பேருந்து நிலையத்தை கொண்டு போக வேண்டும் என்கிற எண்ணத்தில் தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது முதல்வருக்கு செயலாளராக இருக்கும் ஜெயஸ்ரீமுரளிதரன் ஆகியோர் துணையோடு திருச்சி மத்திய சிறைச்சாலை இருக்கும் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டு தற்போது அதற்கான ஆய்வு பணி வெகுவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 

bustand


இந்த நிலையில் திருச்சி பெண்கள் தின விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,

உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உருவாக்கியவர் கலைஞர். சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் ஆதரவு தரும் இயக்கம் தி.மு.க. தான். தற்போது குழப்பமான நிலையில் தமிழகம் உள்ளது. முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியான நபர் மு.க.ஸ்டாலின் தான். தற்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணி தான் மதசார்பற்ற அணி. விரைவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று யூகங்கள் வருகின்றன.

பெண்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம். தி.மு.க. ஆட்சி இருந்தால் தான் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே வரும் தேர்தலில் நீங்கள் இந்த முறை சரியான முடிவை எடுக்க வேண்டும். திருச்சி ஜெயில்கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்போவதாக தற்போதைய அரசு முடிவெடுத்துள்ளது. நெருக்கடி மிகுந்த அந்தப்பகுதியில் பஸ் நிலையம் அமைத்தால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகுவார்கள். அங்கு தற்போதைய அரசு பஸ் நிலையம் அமைக்காவிட்டால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியூர், நகர பஸ்களும், ஆம்னி பஸ்களும் நிற்பதற்கு தனி இடவசதியுடன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். ரெட்டமலை கோவிலுக்கு செல்வதற்கு சாலை வசதி, பஸ் வசதி செய்யப்படும் என்று பேசி பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்