நெல்லையில் பெண் தீக்குளித்து பலி
திருநெல்வேலி டவுன் பெரியசாமிதெருவை சேர்ந்தவர் முத்துமாரி. இவரது மனைவி கோமதி 43. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்துமாரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் கோமதி குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் மல்லிகா என்ற பெண்ணிடம் கோமதி, ரூ 20 ஆயிரம் ரூபாயை வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாராம்.
பணத்தை முறையாக செலுத்தமுடியவில்லை. சம்பவத்தன்று இரவில் வீட்டுக்கு வந்த அந்த மல்லிகா தரப்பினர். கந்துவட்டி கேட்டுமிரட்டி கோமதியை தரக்குறைவாக திட்டினார்களாம். இதனால் மனமுடைந்த கோமதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார், மல்லிகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.