சிறுமியை கடத்தி திருமணம்: 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்டனின் மகள் சாந்தி (16) அதே, கிராமத்தை சேர்ந்தவர் ராமு (51). இவரது மகன் பிரேம்குமார் (20) இவரது உறவினர் சரவணன் (27) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சாந்தி செங்கல்பட்டில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது, பிரேம்குமார் சாந்தியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பிரேம்குமாரின் தந்தை ராமு, உறவினர் சரவணன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், எஸ்.ஐ தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார், ராமு, சரவணனை கைது செய்தனர்.