Skip to main content

குளத்தில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் பலி

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
Lake


 

பெரம்பலூர் மாவட்டம் ஒகளுர் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் சக்தி (13 வயது). மகாராஜன் மகன் சந்தோஷ் (11 வயது). கலைச்செல்வன் மகன் சக்தி (12 வயது). இவர்கள் மூவரும் பள்ளி மாணவர்கள். நண்பர்கள் மூவரும் அக்கம் பக்கம் வீட்டை சேர்ந்தவர்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதியம் 12 மணியளவில் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
 

குளத்தில் ஆழம் தெரியாமல் நடுப்பகுதிக்கு சென்று தத்தளித்து காப்பாற்ற சொல்லி கத்தி கதரியுள்ளனர். இவர்கள் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் குளத்தில் குதித்தனர். மூவரில் ஒருரான சக்தி என்ற மாணவனை மட்டும் உயிரோடு காப்பாற்றியுள்ளனர். அதற்க்குள் இன்னொரு சக்தி, சந்தோஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைநிதனர். மங்கள மேடு போலீஸ் டிஎஸ்பி - பிரகாஷ், எஸ்.ஐ. சங்கர் ஆகியோர் விசாரணை செய்து மாணவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஒகளுர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்