கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து கருத்து தெரிவித்தார். இதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் கூறிவந்தநிலையில், "இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாகவும் எதையும் நான் தெரிவிக்கவில்லை. மற்றவர்கள் கூறியது பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன். அதனால் மன்னிப்புகேட்க முடியாது" என ரஜினி அதிரடியாக தெரிவித்தார்.
இதையடுத்து பெரியாரின் ஆதரவாளர்கள் சிலர் ரஜினி வீட்டின் முன்பு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு எதிரான போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
They say Periyar was against caste. As far as I can see, Periyarists are against only ONE caste. #hypocrites https://t.co/p8OftT8nfr
— Kasturi Shankar (@KasthuriShankar) January 23, 2020
அதில், "பெரியார் சாதிக்கு எதிரானவர் என்று சொல்கிறார்கள். ஆனால், தற்போது பெரியாரியவாதிகள் ஒரு சாதிக்கு மட்டும் தான் எதிரானவர் போல் எனக்குத் தெரிகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.