Published on 20/07/2020 | Edited on 20/07/2020
‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாருக்கு பிறகு கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசத்தை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த சர்ச்சை வீடியோ குறித்து சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.