கார்த்திகை மாத தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதை, மலைப்பாதை, நகருக்கு வரும் 9 சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஏடிஜிபி ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில், வடக்கு மண்டல ஐ.ஐீ நாகராஜ் தலைமையில், மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஏற்பாட்டின் கீழ் சுமார் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
9 சாலைகளிலும் பேருந்துகள் அனைத்தும் 3 கி.மீ முன்பே நிறுத்தப்பட்டது. பேருந்துகள் நிறுத்த தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பக்தர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டிருந்தன. அதோடு பக்தர்களின் பாதுகாப்புக்காக கோயிலுக்குள் 231 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. அதோடு நகரத்துக்கு வெளியே 119 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. இது தவிர சில இடங்களில் மறைமுக கேமராக்களும் நிறுப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதற்காக கோயில், நகர காவல்நிலையம் உட்பட சிலயிடங்களில் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு நகரத்தில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.