வழக்குகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தது காரத்தே தியாகராஜன் தான் என திமுக குற்றம்சாட்டியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதியின்றி கடந்த 2018-ம் ஆண்டு பேரணி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 7 அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராகவில்லை. இது தொடர்பாக காரத்தே தியாகராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் இருந்து கொண்டே வழக்கில் ஆஜராகத் தயங்குகிறார் என குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த திமுக தரப்பு, தங்களுக்கு இதுவரை சம்மன் வழங்கப்படவில்லை என்றும் வழக்குகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்தவர் கராத்தே தியாகராஜன்தான் எனவும் தெரிவித்தது.
முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், ரஜினி ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனுக்கு இவ்வாறு பதிலடி கொடுத்தவர், திமுக வழக்கறிஞர் சரவணன் ஆவார்.