‘கரகாட்டகாரன்’ புகழ் சண்முக சுந்தரம் காலமானார்
பிரபல நடிகர் ‘கரகாட்டகாரன்’ புகழ் சண்முக சுந்தரம் காலமானார்.
கங்கை அமரனின் 'கரகாட்டகாரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்தவர் சண்முகசுந்தரம். 77 வயதான இவர் சிவாஜி முதல் ஜி.வி.பிரகாஷ் குமார் வரை பலருடனும் நடித்துப் பெயர் வாங்கியவர். 'சென்னை 28', 'கோவா', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னை சாலிகிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். சிறிது நாட்களாகவே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தனது வீட்டில் இன்று காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.