Published on 24/05/2019 | Edited on 24/05/2019
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.அப்போது பாஜகவின் கூட்டணியில் இல்லாத அதிமுகவின் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைகிறது.தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
மேலும் திமுக கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.இந்திய அளவில் திமுக மூன்றாவது கட்சியாக உருவெடுத்து உள்ளது.மேலும் கடந்த முறை அதிமுகவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்த மாதிரி இந்த முறை திமுக கட்சி தமிழகத்தில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளதால் துணை சபாநாயகர் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.