Skip to main content

தெருக்கோடியில் ஒருவராகத்தான் கமல்ஹாசன் இருக்க முடியும்: ஜெயக்குமார்!

Published on 07/06/2018 | Edited on 07/06/2018


தெருக்கோடியில் ஒருவராகத்தான் கமல்ஹாசன் இருக்க முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். இதற்காக விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், விவாசயிகளுக்கு நன்றி கடனை தீர்க்கவே கர்நாடகா சென்றேன். இருமாநில விவசாயிகள் கூடி பேசினால், அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைய முடியது என்றார்.

அப்போது, நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா? என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், நான் யார் என கேட்கிறார்கள்? நான், ஆயிரத்தில் ஒருவன் அல்ல, கோடியில் ஒருவன், ஏழரை கோடியில் ஒருவன். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. அதைவிடவும் முக்கியமான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. என்னுடைய வேலையை செய்கிறேன். அதையாவது செய்யவிடுங்கள். அவர் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ) இருந்து கொண்டு என் புகழை பரப்பட்டும் என அவர் கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

தமிழகம் மட்டுமே எதிர்ப்பதால் நீட் தேர்வில் விலக்கு பெற பலமான வாதத்தை முன்வைக்க முடியவில்லை. காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டியதில்லை. யார், யாரை சந்தித்தாலும் சரி தற்போது கட்டப்பஞ்சாயத்திற்கு வேலையே கிடையாது.

கர்நாடக முதல்வரை கமல்ஹாசன் சந்தித்ததால் எதுவும் நடக்கப்போவதில்லை. காவிரியில் நீர் திறக்கும் அதிகாரம் கொண்டது ஆணையம் மட்டும்தான். என்னை பி.ஆர்.ஓ என கமல்ஹாசன் குறிப்பிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். உன்னதமான வேலை பி.ஆர்.ஓ பணி. தெருக்கோடியில் ஒருவராகத்தான் கமல்ஹாசன் இருக்க முடியும் என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்