Skip to main content

''என்னை கவலையடையச் செய்திருக்கிறது''- நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை 

Published on 10/12/2024 | Edited on 10/12/2024
'kadavule Ajith...' Ajith requested the slogan-fans

சமீபமாகவே 'கடவுளே அஜித்தே' என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமூக வலைத்தள பக்கங்களிலும், சிலர் பொது இடங்களிலும் 'கடவுளே அஜித்தே...' என கோஷமிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு நேரடியாக கோரிக்கை ஒன்றை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக தேவை இல்லாமல் எழுப்பப்படும் 'க... அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடிதமாக உழைத்து உங்க குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்