காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாத்தில் காதலனின் கன்னத்தில் அறைந்துவிட்டு கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.
தஞ்சை மானோஜிப் பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஜெயஸ்ரீ. தஞ்சையில் செயல்படும் தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார். இதே கல்லூரில் தஞ்சை வைரம் நகரை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (20) என்பவரும் படித்து வந்தார். இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இவர்களது நட்பானது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி கல்லூரியைவிட்டு வெளியே தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.
அதேபோல் வெற்றிக்கிழமை இருவரும் தஞ்சை நெய்வாசல் நத்தம்படி பாலம் கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டு இருந்தனர். இதனை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. திடீரென விக்னேஷ் கன்னத்தில் அறைந்த ஜெயஸ்ரீ, திடீரென கல்லனை கால்வாயில் குதித்துள்ளார். அதில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை இழுத்து சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஜெயஸ்ரீயை மீட்பதற்காக அவரும் ஆற்றில் குதித்தார். அவரும் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதனை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்து கால்வாயில் குதித்து விக்னேசை மீட்டனர். ஆனால் ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை. அவர் கால்வாயில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விக்னேஷை விசாரித்தபோது, ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் பெயர் குறிப்பிடாமல் இருந்த ஒரு எண் இருந்தது. இந்த எண் யாருடையது என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென்று தன்னை அறைந்துவிட்டு கால்வாயில் குதித்துவிட்டதாக கூறியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் தகவலை சொல்லியுள்ளனர் பொதுமக்கள். தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயஸ்ரீ உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.