ஜெ.மரணம்; விசாரணை ஆணையத்தில் கிருஷ்ணபிரியா ஆஜர்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து விசாரணை ஆணையத்தில் கிருஷ்ணபிரியா இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவருகிறார்
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முதல்நாள், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணபிரியா அளித்த பேட்டியில், இதேபோல நிறைய வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, இன்று விசாரணை ஆணையத்தில் கிருஷ்ணபிரியா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். அப்போது தன்னிடம் உள்ள ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோக்களையும் ஆணையத்தில் ஒப்படைக்க உள்ளார்.