Published on 18/10/2018 | Edited on 18/10/2018
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கிசென்ற அரசு விரைவு பேருந்தும், சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 15க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தா.பழூர் காவல் நியலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.