நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அமமுகவின் அரசியல் கூடாரத்தில் சேதாரம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கட்சியின் முன்னனி பிரமுகர்கள் என்று அறியப்பட்ட அனைவரும் மாற்று இயக்கங்களை நோக்கி பயணித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ நான் அதிமுகதான் அமமுக இல்லை என்று சொல்லிவந்த நிலையில், தன்னை அதிமுக எம்எல்ஏதான் என்பதை உறுதிப்படுத்த முதல்வர் எடப்பாடியை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்துவிட்டு வெளியேவந்து என்னை சகோதரர் விஜயபாஸ்கர் தான் மீண்டும் கொண்டு வந்து இணைத்தார் என்றார்.
தேர்தலுக்கு முன்பே புதுக்கோட்டை வடக்கு மா.செ சண்முகநாதனை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் எடப்பாடியை சந்திக்க வைத்தார். இப்படி புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பலரும் அமமுகவில் இருந்து அதிமுக செல்லும் நிலையில் மீண்டும் மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் அமைச்சர் மீது உள்ள வெறுப்பில் திமுக பக்கம் செல்ல தயாராகி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திமுக புள்ளிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கிடையே கலைஞரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.அறந்தாங்கி ரெத்தினசபாபதி அமமுக பக்கம் சாய்ந்ததும் அவரது சொந்த ஊராட்சியில் உள்ள அம்பலவாணனேந்தல் கிராமத்தில் ஜெ.வால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு நிதியும், மருத்துவர், செவிலியர் நியமிக்கப்பட்ட நிலையிலும் கூட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை முடக்கி வைத்துள்ளார் அமைச்சர் என்ற குற்றச்சாட்டு கடந்த வாரம் வரை எழுந்து மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணிப்போம் என்று பதாகை வைத்தார்கள்.
அதேபோல ஏம்பல் கிராமத்தில் ஐடிஐ வருவதையும் தடுத்து வைத்துள்ளார் அமைச்சர் என்றும் பல்வேறு நலத்திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகளை அமமுக மா.செ கார்த்திகேயன் பகிரங்கமாக எழுப்பினார். இப்படியான நிலையில் எம்எல்ஏவை முதல்வரை சந்திக்க தை்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இப்போது எம்எல்ஏவுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து மீண்டும் இணைய வைத்திருந்தாலும் இனியாவது கிடப்பில் போடப்பட்ட மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்தினால் சரி என்கிறார்கள் தாகுதி மக்கள்.
எப்படியோ இன்னும் சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட அமமுகவில் உடைப்பும் திமுகவில் இணைப்பும் ஏற்படலாம். புதிவர்களை இணைந்தால் உ.பிகள் ஏற்பார்களா என்று திமுக தலைமை முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்களாம்.