Published on 08/06/2022 | Edited on 08/06/2022
ஜெயங்கொண்டம் லிக்னைட் பவர் ப்ராஜெக்ட் திட்டத்திற்காக மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு அரியலூரில் ஜெயங்கொண்டம் பகுதியில் லிக்னைட் பவர் ப்ராஜெக்ட் திட்டத்திற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மேலூர், கல்லாத்தூர், தேவனூர், கீழ்குடியிருப்பு, புதுக்குடி, இலையூர் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 210 பேரிடம் இருந்து மொத்தம் 8,373 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆனபோதிலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடும் தராமல், திட்டமும் தொடங்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த நிலங்களை உரிய மக்களிடமே வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.