தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 25–ந்தேதி
டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் !
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. . இதற்கு சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகானந்தம் வரவேற்றுப்பேசினார். அரசு பணியாளர் சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25–ந்தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்துவது.
போராட்டம் குறித்து ஒவ்வொரு மாவட்டம் வாரியாக விளக்க கூட்டம் நடத்துவது. போராட்டத்திற்கு மற்ற சங்கங்களிடம் ஆதரவு கேட்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி கண்ணன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஜெ.டி.ஆர்.