
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதேபோல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அங்கு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தொடங்கி வைத்த போட்டியில் 650 காளைகள் 350 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதியில் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.