Skip to main content

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பரிசு வழங்க இடைக்காலத் தடை!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

jallikattu competition prize madurai high court bench

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவருக்குப் பரிசு வழங்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


பொங்கலையொட்டி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு அறிவிப்பதில் முறைகேடு நடந்ததாகக் கூறி மாடுபிடி வீரர் கருப்பணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று (29/01/2021) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த கண்ணனனுக்கு 'கார்' பரிசு வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர், வாடிப்பட்டி வட்டாட்சியர், மாடுபிடி வீரர்கள் கண்ணன், ஹரி கிருஷ்ணன் பதில் தர உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

நாளை (30/01/2021) முதல்வர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படவிருந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்